மீண்டும் இஸ்ரேல்-காசா மோதல்; 22 பேர் உயிரிழப்பு

  • Tamil Defense
  • May 11, 2021
  • Comments Off on மீண்டும் இஸ்ரேல்-காசா மோதல்; 22 பேர் உயிரிழப்பு

ஜெருசலேமின் அல் அக்சா மசூதியில் நடைபெற்ற பிரச்சனை அடுத்து மீண்டும் இஸ்ரேலும் ஹமாஸுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.இரு பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலை அடுத்த காசாவில் 22 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

திங்கள் முதல் கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் வீசியுள்ளது.இதில் சுமார் 90% ஏவுகணைகளை அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ் கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல்களில் ஆறு இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதனையடுத்து ஹமாஸ் மீது போர்விமானங்கள் மற்றும் தாக்கும் வானூர்திகள் உதவியுடன் இஸ்ரேல் தாக்கியதில் 15 ஹமாஸ் கமாண்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.