புதிய ஐ.எல்-76 விமானங்களை வாங்குகிறதா இந்தியா ??

  • Tamil Defense
  • May 5, 2021
  • Comments Off on புதிய ஐ.எல்-76 விமானங்களை வாங்குகிறதா இந்தியா ??

இந்தியா புதிய ஐ.எல்-76 எம்டி 90ஏ ரக சரக்கு விமானங்களை வாங்குவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

நாம் ஏற்கனவே 17 ஐ.எல்-76 எம்.டி சரக்கு விமானங்கள், 6 ஐ.எல்-78 எம்.டி டேங்கர்கள் மற்றும் 3 பெரேவ்-50 ஏவாக்ஸ் விமானங்களை இயக்கி வருகிறோம்.

இந்த புதிய ஐ.எல்-76 எம்.டி 90ஏ ரக விமானங்களானவை ஐ.எல்-76 எம்டி விமானங்களை விட மேம்படுத்தப்பட்டவை அதிக நவீனமானவை ஆகும்.

இவற்றில் புதிய கண்ணாடி விமானி அறை, நவீன ஏவியானிக்ஸ் அமைப்பு, கார்பன் ஃபைபரால் ஆன ஒரே இறக்கை மற்றும் ஏவியாட்விகாடெல் பி.எஸ் 90ஏ 76 என்ஜின்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.