
ஈரான் நேற்று ஒரு புதிய ஆயுதம் தாங்கிய ட்ரோனை அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த ட்ரோனுக்கு “காசா” என பெயர்சூட்டி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதம் தாங்கிய ட்ரோனானது அமெரிக்காவின் MQ-9 REAPER ட்ரோனுடைய காப்பி ஆகும், ஆனால் சற்றே வித்தகயாசமானது என தெரிகிறது.
இந்த ட்ரோன் சுமார் 2000 கிலோமீட்டர் இயக்க வரம்பு கொண்டது, சுமார் 13 குண்டுகளை சுமக்க வல்லது எனவும் சுமார் 35 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது, இது தவிர சுமார் 500 கிலோ மின்னனு போர் கருவிகளையும் சுமக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஈரான் ஒரு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணையையும் இந்த ட்ரோனுடன் சேர்த்தே அறிமுகப்படுத்தி உள்ளது,9D என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை ரஷ்ய S300 ஏவுகணையை அடிப்படையாக கொண்டது எனவும் தாழ்வாக பறக்கும் இலக்குகளை தாக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஈரான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்களுக்கு ஆதரவும் ஆயுதமும் அளித்து வருவது தெரிந்ததே.
இந்த முறையும் ஹமாஸ் இயக்கத்தை தூண்டி விட்டு இஸ்ரேலிய ஐயன் டோம் அமைப்பின் முழு திறனை சோதித்து தகவல்களை பெற விரும்பியது அதற்காக ஆலோசனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.