பாலஸ்தீனம் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்

  • Tamil Defense
  • May 14, 2021
  • Comments Off on பாலஸ்தீனம் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்

காசாவில் ஹமாசால் பயன்படுத்தப்படும் சுரங்கத் தொடர்கள் மீது இஸ்ரேல் வெள்ளி அன்று ஆர்டில்லரி மற்றும் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஆகப் பெரிய தாக்குதலாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 160 விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கலோனல் ஜோனதன் கான்ரிகஸ் கூறியுள்ளார்.

2014க்கு பிறகு தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகப் பெரியதாக தற்போது மாறியுள்ளது.ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இன்று இஸ்ரேலில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் காவல் துறைக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடுத்தது ஹமாஸ்.

அதனை தொடர்ந்து தற்போது காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.இஸ்ரேல் மீதும் ஹமாஸ் தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

பாலஸ்தீனத்தில் இதுவரை 119 பேரும் இஸ்ரேலில் ஒரு இராணுவ வீரர் உட்பட எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.