41 ஆண்டு சேவைக்கு பிறகு ஒய்வு பெறும் ஐ.என்.எஸ். ராஜ்புத் போர் கப்பல் !!

  • Tamil Defense
  • May 21, 2021
  • Comments Off on 41 ஆண்டு சேவைக்கு பிறகு ஒய்வு பெறும் ஐ.என்.எஸ். ராஜ்புத் போர் கப்பல் !!

இந்திய கடற்படையின் முன்னனி போர்கப்பல்களில் ஒன்றான “ஐ.என்.எஸ் ராஜ்புத்” எனும் ஏவுகணை நாசகாரி கப்பல் வருகிற 21ஆம் தேதி ஒய்வு பெற உள்ளது.

ரஷ்ய தயாரிப்பு கப்பலான இது கடந்த 1980ஆம் வருடம் மே மாதம் 4ஆம் தேதிவாக்கில் இந்திய கடற்படையில் இணைந்து தனது சேவையை துவங்கியது.

தனது 41 வருட சேவைக்காலத்தில் மிக மிக முக்கியமான ஆபரேஷன்களை மேற்கொண்டு உள்ளது, பிரம்மாஸ் ஏவுகணையின் கடற்படை வடிவம் இக்கப்பலில் இருந்து தான் முதல்முறையாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கப்பலை இதுவரை சுமார் 31 அதிகாரிகள் இக்கப்பலை வழிநடத்தி உள்ளனர் அவர்களில் பலர் இந்திய கடற்படையில் உயர் பதவிகளை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 21ஆம் தேதி மாலை விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெறும் விழாவில் கப்பலின் சின்னமும் இந்திய கடற்படையின் கொடியும் இறக்கப்பட்டு கப்பலுக்கு ஒய்வு அளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.