
இந்தியாவின் முதல் மஷின் பிஸ்டலான அஸ்மி இந்திய ராணுவ அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டதை அறிவோம்.
தற்போது அஸ்மி மஷின் பிஸ்டலானது தற்போது பயன்பாட்டாளர் சோதனை கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனைகளுக்காக சுமார் 25 வெவ்வேறு அஸ்மி மஷின் பிஸ்டல் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும்,
இந்த அஸ்மி மஷின் பிஸ்டலானது சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் எனவும் இஸ்ரேலிய யுஸி துப்பாக்கி வரிசையில் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.