இஸ்ரேலில் பணிபுரிந்த இந்திய பெண்மணி ராக்கெட் தாக்குதலில் மரணம் !!

  • Tamil Defense
  • May 12, 2021
  • Comments Off on இஸ்ரேலில் பணிபுரிந்த இந்திய பெண்மணி ராக்கெட் தாக்குதலில் மரணம் !!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி பகுதியில் உள்ள கஞ்சிரம்தானம் என்ற ஊரை சேர்ந்தவர் திருமதி. சவுமியா (30).

இவர் இஸ்ரேல் நாட்டில் அஷ்கலோன் நகரில் ஒரு வீட்டில் வயதான பெண்மணி ஒருவரை கவனித்து வரும் பணி செய்து வந்தார்,

நேற்று மாலை 5:30 மணியளவில் இவர் பணிபுரிந்து வந்த வீட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் திருமதி சவுமியாவும் அவர் கவனித்து வந்த முதிய பெண்மணியும் இறந்தனர்.

இந்த தகவலை இஸ்ரேலில் பணிபுரியும் அவரது உறவினர் திருமதி. ஷெர்லி பென்னியும் உறுதிப்படுத்தி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருமதி. சவுமியா கடந்த 7 ஆண்டுகளாக இஸ்ரேலில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தான் கடைசியாக ஊருக்கு வந்துள்ளார்.

திருமதி.சவுமியாவின் கணவர் திரு.சந்தோஷ் விவசாயி ஆவார் இவர்களுக்கு ஒரு மகன் உண்டு நேற்று 5:00 மணியளவில் சவுமியா வீட்டாருடன் பேசிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது.

திருமதி. சவுமியாவின் உடலை இந்தியா கொண்டு வர இடுக்கி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. டீன் குரியாகோஸ் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.