இந்திய கடற்படை கொரோனாவை வீழ்த்த உதவும் : கடற்படை தளபதி உறுதி !!
ஆக்ஸிஜன் பிரச்சினை கொரோனா இரண்டாம் அலை நாட்டை ஆட்டி படைத்து வருகிறது இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படை தளபதி மற்றும் பிரதமர் சந்திப்பு நடைபெற்று உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய கடற்படையும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது.
அந்த வகையில் இந்திய கடற்படையின் ஏழு கப்பல்கள் ஆக்ஸிஜன் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.
அதை போல இந்திய கடற்படை மருத்துவமனைகள் நாடு முழுவதும் பொதுமக்கள் சிகிச்சை பெற திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்திய கடற்படை மருத்துவ பிரிவு வீரர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவ மையங்கள் அமைத்து உள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் குறித்து திங்களன்று கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் பிரதமரை சந்தித்து விளக்கினார்.
அப்போது இந்திய கடற்படை கொரோனாவை வீழ்த்த தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமரிடம் உறுதி அளித்து உள்ளார்.