இந்திய கடற்படையின் சமுத்ர சேது-2 ; கொரானா போரில் கடற்படையும் பங்கேற்பு

  • Tamil Defense
  • May 1, 2021
  • Comments Off on இந்திய கடற்படையின் சமுத்ர சேது-2 ; கொரானா போரில் கடற்படையும் பங்கேற்பு

இந்தியாவிற்கு தேவையான ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய கடற்படை சமுத்ர சேது-2 என்ற ஆபரேசனை தொடங்கியுள்ளது.

இந்தியாவிற்கு தேவையான ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லும் பணியை தற்போது கடற்படை மேற்கொண்டு வருகிறது.

ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் தல்வார் ஆகிய இரு போர்க்கப்பல்களும் தற்போது பஹ்ரைனின் மனாமா துறைமுகத்தில் நுழைந்துள்ளது.இந்த இரு கப்பல்களும் 40MT திரவ ஆக்சிஜனை மும்பைக்கு கொண்டு வருகிறது.

அதே போல ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் தற்போது பங்கோக் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.அதே போல ஐஎன்எஸ் ஐராவத் சிங்கப்பூர் செல்கிறது.