மருத்துவ உதவிகளுடன் இந்தியா வந்த கடற்படை போர்க்கப்பல்கள்

  • Tamil Defense
  • May 11, 2021
  • Comments Off on மருத்துவ உதவிகளுடன் இந்தியா வந்த கடற்படை போர்க்கப்பல்கள்

சமுத்ர சேது-2 ஆபரேசனின் கீழ் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கன்டெய்னர்கள் ,சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருள்களுடன் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.

இந்திய கடற்படையின் ஸ்டீல்த் பிரிகேட் கப்பலான ஐஎன்எஸ் ட்ரைகன்ட் கத்தாரில் இருந்து 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனுடன் மும்பை வந்துள்ளது.

பிரான்சின் ” Oxygen solidarity bridge ” கீழ் இந்த தொகுதி உதவிப்பொருள்கள் அனுப்பப்பட்டுவருகிறது.அடுத்த மூன்று மாதத்திற்குள் 600 மெட்ரிக் டன்கள் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளது.

அதே போல 27 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 400 சிலிண்டர்களுடன் ஐஎன்எஸ் கொல்கத்தா புது மங்களூர் துறைமுகம் வந்துள்ளது.மேலும் ஐஎன்எஸ் ஐராவத் 8 பெரிய 20டன் எடையுடைய நிரப்பப்படாத கிரையோஜெனிக் டேங்க் உடன் விசாகப்பட்டிணம் வந்துள்ளது.இத்துடன் 3898 ஆக்சிஜன் சிலிண்டர்கள்,10000 சோதனை கருவிகள்,450பிபிஇ உடை ஆகியவற்றை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்துள்ளது ஐராவத் கப்பல்.

இந்த சமுத்ர சேது திட்டத்தில் இதுவரை ஒன்பது போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது.பெர்சியன் வளைகுடா மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள நட்பு நாடுகளிடம் இருந்து இவை ஆக்சிஜன் கன்டெய்னர்களை இந்தியா கொண்டு வரும்.தற்போது குவைத்தில் இருந்து இரு கப்பல்கள் இந்தியா வருகிறது.ஒரு கப்பல் புருனேயில் சப்ளைகள் ஏற்றி வருகிறது.