
கொரானாவுக்கு எதிரான போரில் இந்திய இராணுவம் முழு அளவில் களமிறங்கியுள்ளது.யூனியன் பிரதேசமான காஷ்மீருடன் இணைந்து இந்திய இராணுவம் பத்கமில் கோவிட் கேர் நிலையத்தை அமைத்துள்ளது.
பட்கமின ரங்கிரிதா எனும் இடத்தில் 250 படுக்கை வசதி கொண்ட கொரானா மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர அயர்லாந்தில் இருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள பேஸ் ஹாஸ்பிடலில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர்கள் தயாரிக்க வல்லது.இதன் மூலம் 50 படுக்கைகளுக்கு நிமிடத்திற்கு 10 லிட்டர் வீதம் வழங்க முடியும்.