COVID-19 பாட்னாவில் 500 படுக்கை கொண்ட மருத்துவமனை அமைத்த ராணுவம் !!

இந்திய தரைப்படை வடகிழக்கில் இருந்து இரண்டு கள மருத்துவமனைகளை வான் வழியாக பாட்னாவுக்கு நகர்த்தி உள்ளது.

இந்த இரண்டு கள மருத்துவமனைகளும் சுமார் 500 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை ஈ.எஸ்.ஐ வளாகத்தில் அமைக்க உதவும் எனவும் இவற்றில் 100 அதிதீவிர சிகிச்சை பிரவு படுக்கைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தில் ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள், காலாட்படை போர்க்கள மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.