
இந்திய விமானப்படையின் 150 சுகோய் விமானங்கள் தற்போது நடுத்தர மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த பணிகளின் ஒரு பகுதியாக கூடுதல் எரிபொருள் தொட்டிகளை சுமக்க உதவும் இரண்டு “வெட் ஹார்ட் பாயின்டுகள்” இணைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே சுகோய் விமானங்கள் கூடுதல் எரிபொருள் தொட்டி இன்றி சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவு இயக்கவரம்பு கொண்டவையாகும.
தற்போது இந்த எரிபொருள் தொட்டிகளை சுமக்க உதவும் கருவிகளை இணைப்பதன் மூலம் சு30 விமானங்கள் எரிபொருள் டேங்கர் உதவி இன்றி அதிக தூரம் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.