லேசர் பாதுகாப்பு கருவி இந்திய விமானப்படைக்கு தேவையா ??

  • Tamil Defense
  • May 20, 2021
  • Comments Off on லேசர் பாதுகாப்பு கருவி இந்திய விமானப்படைக்கு தேவையா ??

அமெரிக்க விமானப்படை தற்போது ஒரு லேசர் பாதுகாப்பு கருவியை உருவாக்கி வருகிறது இந்த கருவி 2024ஆம் ஆண்டு முதலாக அமெரிக்க விமானப்படையின் விமானங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த லேசர் கருவியானது விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி விமானத்தை பாதுகாக்க உதவும் வகையில் வடிவமைத்து தயாரிக்கப்படும் .

ஏற்கனவே நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது ஆனால் ஒரு திறன்மிக்க முழுமையான லேசர் ஆயுதத்தை தயாரிக்க சில காலம் ஆகலாம்.

பல்வேறு நாடுகள் ஏற்கனவே லேசர் தரை மற்றும் கப்பல்களில் பயன்படுத்தும் வகையிலான பாதுகாப்பு கருவிகளை உருவாக்க முயன்று வருகின்றன, ஆனால் ஒரு விமானத்தில் பொருத்தப்பட கூடிய அளவிலான லேசர் அமைப்பை உருவாக்குவது சிறிது கடினமான விஷயம் தான்.

2035ஆம் ஆண்டுவாக்கில் 6ஆம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பு நிலையை எட்டும் அவற்றில் லேசர் ஆயுதங்கள் நிச்சயம் இடம்பெறும் ஆகவே ஆம்காவில் பயன்படுத்தி கொள்ள இந்தியா விரைந்து லேசர் ஆயுதங்களை உருவாக்க வேண்டும்.