
நொய்டாவில் உள்ள கவுதம புத்தர் நகரில் கொரோனா தொற்று காரணமாக மிக மோசமான நிலை உள்ளது, மருத்துவமனைகளில் கடும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதையடுத்து அந்த மாவட்டத்தின் நிர்வாகம் சென்னையில் இருந்து ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை ஆர்டர் செய்தது பின்னர் அவற்றை கொண்டு வர விமானப்படையின் உதவியை நாடியது.
இதனடிப்படையில் சென்னையில் இருந்து ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சேர்த்தன.
மேலும் மொத்தமாகவே 35 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை ஆக்ஸிஜன் பெறுவதற்காக ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூருக்கு இந்திய விமான கொண்டு சேர்த்தது.
அம்மாவட்ட கலெக்டர் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் வழியாக விமானப்படையிடம் உதவி கோரியதாக தெரிவித்தார்.