இந்தியா மேலதிக சி17 விமானங்களை வாங்க வேண்டிய நிலையில் உள்ளது !!

  • Tamil Defense
  • May 6, 2021
  • Comments Off on இந்தியா மேலதிக சி17 விமானங்களை வாங்க வேண்டிய நிலையில் உள்ளது !!

இந்திய விமானப்படையின் சி -17 க்ளோப்மாஸ்டர் மற்றும் ஐ.எல்-76 எம் டி விமானங்கள் ஆக்ஸிஜன்,மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை கொண்டு வர தொடர்ந்து பறந்து வருகின்றன.

இரண்டு வகையான விபானங்களும் தற்போது வரை சுமார் 400 மணி நேரங்களில் 190 முறை பறந்துள்ளன இதில் பெரும்பங்கு 11 சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்களுடையது ஆகும்.

இந்தியா முதலில் 10 சி-17 விமானங்களை வாங்கியது பின்னர் கூடுதலாக 3 விமானங்கள் வாங்க இருந்த நிலையில் போயிங் நிறுவனம் தயாரிப்பை நிறுத்தியது.

ஆனால் அரிசோனா மாநிலம் டக்ஸனில் உள்ள போயிங் பணிமனையில் விற்காமல் இருந்த ஒரு சி-17 விமானத்தை இந்தியா தனது 11ஆவது விமானமாக பெற்று கொண்டது.

எல்லையோர நகர்வுகள் பேரிடர் பணிகள் ஆகியவை மேலதிக சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்களுக்கான தேவையை அழுத்தமாக உணர்த்தி உள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்க விமானப்படை இத்தகைய 200 விமானங்களை இயக்கி வருகிறது மேலும் மூன்று படையணிகளை சேர்க்கவும் விரும்புகிறது.

சி-17 விமானத்தை பயன்படுத்தி வரும் மற்றெந்த நாடும் தற்போது தங்களது விமானங்களை விற்க தயாராக இல்லை காரணம் இதன் திறன்.

இதனால் அமெரிக்க அரசுடன் பேசி போயிங் நிறுவனத்திடம் இந்த விமானங்களை மீண்டும் தயாரித்து வழங்க முயல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.