உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ஏசா ரேடார் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • May 17, 2021
  • Comments Off on உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ஏசா ரேடார் ஒரு பார்வை !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே ஒரு ஏசா ரக ரேடாரை உருவாக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது “உத்தம்” ஏசா ரேடார் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தம் ஏசா ரேடார் முதன் முதலாக தேஜாஸ் மார்க்-2 விமானத்தில் இணைத்து பயன்படுத்தி கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தகவல்களின்படி தனியார் நிறுவனங்கள் உதவியுடன் இந்த ரேடாரின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவான மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு மையம் திட்டமிட்டு உள்ளது.

இந்த உத்தம் ஏசா ரேடாரை நமது சூப்பர் சுகோய், மிக்29, தேஜாஸ், மிராஜ்2000 போன்ற விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் மேம்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.