
இந்தியா பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி யின் வெளிநாட்டு பிரிவான ஒ.என்.ஜி.சி விதேஷ் கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரானில் எரிவாயு கிணறுகளை தேடி வந்தது.
அப்போது ஃபார்சி எனும் பகுதியில் எண்ணெய் கிணறு ஒன்றை கண்டுபிடித்தது இதற்கு பின்னர் ஃபர்ஸாத் எரிவாயு கிணறு என பெயர் சூட்டப்பட்டது.
இங்கு சுமார் 23 ட்ரில்லியன் க்யூபிக் அடி அளவுக்கு எரிவாயு உள்ளது இததவிர எரிவாயு மிச்சிங்கள் ஒவ்வொரு பில்லியன் க்யூபிக் எரிவாயுக்கும் 5000 பேரல்கள் அளவுக்கு உள்ளது.
சுமார் 3500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஃபார்ஸி எரிவாயு கிணறு பெர்சிய வளைகுடா பகுதியில் கடலடியில் சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எரிவாயு கிணற்றை பெற்று இயக்க இந்தியா பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் அமெரிக்கா விதித்த தடை காரணமாக தற்போது அது கைநழுவி போய்விட்டது.
தற்போது அந்த எரிவாயு கிணற்றை ஈரானின் பொதுத்துறை நிறுவனமான என்.ஐ.ஒ.சி அந்நாட்டை சேர்ந்த பெட்ரோபார்ஸ் எனும் தனியார் குழுமத்துடன் இணைந்து இயக்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஈரானிய பெட்ரோலிய அமைச்சர் பிஜன் ஸங்கெனெஹ் முன்னிலையில் டெஹ்ரானிலீ கையெழுத்தானது இதன் மதிப்பு சுமார் 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.