இந்தியா இங்கிலாந்து இடையே கப்பல் என்ஜின் கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • May 9, 2021
  • Comments Off on இந்தியா இங்கிலாந்து இடையே கப்பல் என்ஜின் கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் !!

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து எம்டி30 ரக கப்பல் என்ஜினை தயாரிக்க உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் சுமார் 50 வருட காலமாக கப்பல் என்ஜின்களை தயாரித்து வரும் அனுபவம் கொண்ட நிறுவனமாகும், ஏற்கனவே இவர்களின் எம்டி17 ரக என்ஜினை நமது வருங்கால ஹோவராக்ராஃப்ட் கலன்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த எம்டி30 ரக என்ஜின்களை ப்ராஜெக்ட்-28, ப்ராஜெக்ட்-15ஏ மற்றும் ப்ராஜெக்ட்-16ஏ ஆகிய கப்பல்களில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த எம்டி30 ரக என்ஜின் அதிக ஆற்றல் கொண்டது, எரிபொருள் சிக்கனம் கொண்டது அளவில் சிறியது போன்ற சிறப்பம்சங்களை கொண்டது.

இந்த என்ஜின்களை நேரடியாக வாங்காமல் கூட்டு தயாரிப்பு முறையில் தயாரிப்பதால்
பழுது பார்த்தல், பராமரிப்பு ஏன் புதிய கப்பல் என்ஜினை சொந்தமாக வடிவமைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.