நீண்ட நாட்களுக்கு பின்னர் இனிப்புகளை பரிமாறி கொண்ட இந்திய பாக் ராணுவங்கள் !!

ஈத் பெருநாளை முன்னிட்டு இன்று காஷ்மீர் மாநிலம் காலை குப்வாரா மாவட்டம் டித்வால் தாங்தார் மற்றும் கமன் அமன் சேது ஆகிய எல்லையோர பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டன.

மிக நீண்ட காலமாக எல்லையோர சண்டை மற்றும் அதன் காரணமாக இருதரப்பு உறவில் ஏற்பட்ட கடும் விரிசலால் இந்த நீண்ட கால வழக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் எல்லையோரம் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தியதையடுத்து சமாதானம் நிலவி வருகிறது.

இதனடிப்படையில் மீண்டும் இந்த இனிப்பு பரிமாறி கொள்ளும் வழக்கம் செயலுக்கு வந்துள்ளது, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்வு நடைபெற்றது.