சீன போர் ஒத்திகைக்கு இடையே போர்க்கால தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய லடாக் சென்ற விமானப்படை தளபதி !!

  • Tamil Defense
  • May 30, 2021
  • Comments Off on சீன போர் ஒத்திகைக்கு இடையே போர்க்கால தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய லடாக் சென்ற விமானப்படை தளபதி !!

இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா எல்லையோரம் சீனா போர் ஒத்திகை நடத்தி வரும் அதே நேரத்தில் லடாக் பகுதிக்கு இந்திய விமானப்படையின் போர்க்கால தயார் நிலை குறித்த ஆய்வை மேற்கொள்ள விசிட் சென்றுள்ளார்.

இந்த ஆய்வின் போது இந்திய விமானப்படை எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள தரைப்படை மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கான சப்ளை பணிகளை எவ்வாறு மேற்கொள்கிறது போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்தார்.

லடாக்கில் இந்திய விமானப்படைக்கு லே மற்றும் தாய்ஸே ஆகிய பகுதிகளில் மிக முக்கியமான தளங்கள் உள்ளது இவை தவிர எல்லையோரம் ஆங்காங்கே தவ்லத் பெக் ஒல்டி மற்றும் நியோமா போன்ற சிறிய முன்னனி தளங்கள் உள்ளது.

தற்போது இந்த பகுதிகளுக்கு அருகே தான் சீன ராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படைகள் கூட்டாக இணைந்து போர் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.