
கடந்த திங்கட்கிழமை முதல் தற்போது வரை ஏறத்தாழ 3000 ராக்கெட்டுகளை ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஏவி உள்ளது.
இந்த சமீபத்திய ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது, கடந்த 2006 ஹமாஸ் உடனான மோதல் மற்றும் 2019 ஹிஸ்புல்லாஹ் உடனான மோதல்களை விடவும் மிக அதிகம் என இஸ்ரேல் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஓரி கோர்டின் தெரிவித்து உள்ளார்.