
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒரு கொடுர தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர்.
அப்போது அந்த தாக்குதலை முறியடித்த தேசிய பாதுகாப்பு படையின் தலைவராக பணியாற்றியவர் திரு. ஜோதி கிருஷன் தத் எனும் இந்திய காவல் பணி அதிகாரி ஆவார்.
தாக்குதல் பற்றி கேள்விபட்டதுமே சுமார் 200 கமாண்டோக்களை தயார்படுத்தி விமானம் வந்தததும் அவர்களுடனேயே மும்பை வந்து ஆபரேஷனை வழிநடத்தினார்.
தற்போது ஒய்வு பெற்ற அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்தார் சில நாட்கள் முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் ஆக்ஸிஜன் கொடுத்தும் பயனின்றி உடல்நிலை மோசமாகி துரதிர்ஷ்டவசமாக நேற்று அவர் இயற்கை எய்தினார்.
இவர் சி.பி.ஐ, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய பாதுகாப்பு படைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.