முதல் அடி ஆஸ்திரேலியாவுக்கு தான், கடுமையாக எச்சரித்த சீனா !!

சீன ஆதரவாளர்கள் பலர் ஆஸ்திரேலியா தைவான் தொடர்பான போரில் சீனாவுக்கு எதிராக செயல்பட்டால் முதல் அடி விழும் எனவும் சீன இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் ஆஸ்திரேலியாவை தாக்க முடியும் என கூறி வருகின்றனர்.

இந்த கருத்துகளை சீன அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் தனது பத்திரிக்கையில் அச்சிட்டுள்ளது, அதுவும் குறிப்பாக அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கிழக்கு சீன கடலில் போர் பயிற்சிகளை முடித்த பின் இப்படி நடந்துள்ளது.

ஆஸ்திரேலிய ராணுவம் வலுவற்றது, ஆஸ்திரேலியா சீனாவிடம் இருந்து தப்பிக்கவும் முடியாது தங்களது DF-26 ஏவுகணைகள் ஆஸ்திரேலியாவை எளிதில் தாக்கி விடும் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நடத்திய கூட்டுப்பயிற்சிக்கு சீனா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.