
நேற்று இந்திய தரைப்படையின் காவல்துறை கோர் படையில் 83 பெண் வீராங்கனைகள் இணைந்தனர்.
பெங்களூருவில் அமைந்துள்ள ராணுவ காவல்துறை மையம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் பெண் வீராங்கனைகள் படையில் இணைந்தனர்.
பயிற்சி மையத்தின் இயக்குனர் ப்ரிகேடியர் சி தயாளன் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டு பேசி வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
61 வார கால பயிற்சிகளின் போது அடிப்படை ராணுவ பயிற்சி, காவல் பணிகள், போர் கைதிகளை கையாள்வது போன்றவை கற்று கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்திலேயே வீராங்கனைகளாக பெண்கள் இணைவது இதுவே முதல் முறை இவர்கள் இனி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.