ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து !!

இன்று காலை இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் வீரர்கள் தங்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்,

இதனை கண்ட வீரர்கள் உடனடியாக செயல்பட்டு விரைந்து தீயை அணைத்தாகவும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழந்த போது கர்னாடக மாநிலம் கார்வார் தளத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஒரு முறை இப்படி ஏற்பட்ட தீ விபத்தில் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கடற்படை அதிகாரி ஒருவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.