
ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமானம் இலவசமாக மருத்துவ பொருள்களை இந்தியாவின் ஒன்பது நகரங்களுக்கு கொண்டுவர உள்ளது.அதாவது மருத்துவ பொருள்களை ஏற்றி வருவதற்கான செலவை எமிரேட்ஸ் ஏற்கும்.இதற்காக நாம் ஐக்கிய அரபு அமிரத்திற்கு நன்றி கூற வேண்டும்.
இந்தியா கொரானாவுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில் மருத்துவ பொருள்களை இலவசமாக ஏற்றி வரும் என எமிரேட்ஸ் கூறியுள்ளது.
இதற்கு முன் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் 300 டன்கள் அளவிலான மருத்துவ பொருள்களை இலவசமாக ஏற்றி இந்தியா கொண்டு வந்தது.
நாங்கள் இந்தியாவிற்கு உதவுவதில் உறுதியாக உள்ளோம் என டிவிசனல் சீனியர் வைஸ் பிரசிடன்ட் நபில் சுல்தான் அவர்கள் கூறியுள்ளார்.