
எகிப்து நாட்டிற்கு சுமாய் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 30 ரஃபேல் பல்திறன் போர் விமானங்களை வாங்க ஃபிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளது.
எகிப்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது இது கடன் அடிப்படையிலான ஒப்பந்தம் எனவும் அடுத்த 10 வருடங்களில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மேலும் 200 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஏவுகணைகள் மற்றும் மின்னனு கருவிகள் வாங்கப்பட உள்ளதாகவும் எகிப்து பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கீரிஸ் மற்றும் எகிப்து என அடுத்தடுத்து டஸ்ஸால்ட் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை விற்று வருவது குறிப்பிடத்தக்கது.