துருக்கி விமானப்படை தளம் மீது ட்ரோன் தாக்குதல் !!

  • Tamil Defense
  • May 19, 2021
  • Comments Off on துருக்கி விமானப்படை தளம் மீது ட்ரோன் தாக்குதல் !!

துருக்கி நாட்டில் உள்ள தியார்பக்கிர் நகரில் அந்நாட்டு விமானப்படையின் மிக முக்கியமான தளம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த தளம் மீது நேற்று தீடிரென தாக்குதல் நடைபெற்றது, வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு சில ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயன்றன.

ஆனால் அவற்றை பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர் இதனையடுத்து துருக்கி ராணுவ தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்ட துருக்கி உள்துறை அமைச்சர் சுலேய்மான் சோய்லூ யாருக்கும் ஆபத்து இல்லை என கூறியுள்ளார் .

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.