
ஏற்கனவே நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி பயன்பாட்டில் உள்ள ஆளில்லா விமானம் நிஷாந்த் யு.ஏ.வி ஆகும்.
தற்போது இதன் சக்கரங்கள் இணைக்கப்பட்ட வடிவத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.
இதற்கு முன்னர் நிஷாந்த் ஆளில்லா விமானமானது பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் பல்வேறு விபத்துகளை சந்தித்தது.
தற்போதும் அதன் அலுமினியத்தால் ஆன லான்டிங் கியர் தோல்வி அடைந்த நிலையில் கண்ணாடி இழை மூலம் வலுவாக்கபட்ட நெகிழி அல்லது இபாக்ஸி காம்போஸிட்டால் ஆன லான்டிங் கியரை இணைக்க உள்ளனர்.
இந்த லான்டிங் கியர் வசதி உள்ள நிஷாந்த் ஆளில்லா விமானத்திற்கு தற்போது பாஞ்சி ஆளில்லா விமானம் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.