விரைவில் DRDO மின்காந்த பீரங்கியின் சோதனை !!

  • Tamil Defense
  • May 25, 2021
  • Comments Off on விரைவில் DRDO மின்காந்த பீரங்கியின் சோதனை !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு மின்காந்த பீரங்கியை உருவாக்கி வருகிறது இதன் சோதனை விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மின்காந்த பிரங்கியானது அதிக வோல்டேஜ் மின்சாரம், கபாசிடர், இன்டக்டர்கள் மற்றும் தண்டவாள அமைப்புகளை சேர்த்தது, ஏற்கனவே 10 மெகா ஜூல் திறனுள்ள பிரங்கி மற்றும் 100 மெகா ஜூல் திறனுள்ள கபாசிடர்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

இந்த பிரங்கியானது துவக்க வேகத்திற்காக நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தும், பின்னர் மின்காந்த தொழில்நுட்பம் மூலமாக குண்டுகளை அதிக வேகத்தில் சுடும்.

இந்த அதிநவீன மின்காந்த பிரங்கிகளை போர்க்கப்பல்கள் மற்றும் கனரக வாகனங்களில் இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.