டி’ஆர்க்-21 பன்னாட்டு கூட்டு பயிற்சி அமெரிக்கா ஜப்பான் ஃபிரான்ஸ் ஆஸ்திரேலியா பங்கேற்பு !!

  • Tamil Defense
  • May 25, 2021
  • Comments Off on டி’ஆர்க்-21 பன்னாட்டு கூட்டு பயிற்சி அமெரிக்கா ஜப்பான் ஃபிரான்ஸ் ஆஸ்திரேலியா பங்கேற்பு !!

கடந்த 11ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை கிழக்கு சீன கடல் பகுதியிலும் ஜப்பானிலும் வைத்து மிகப்பெரிய பன்னாட்டு கூட்டு பயிற்சி நடைபெற்றது இதில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

டி’ஆர்க்-21 என பெயரிடப்பட்டுள்ள இந்த பன்னாட்டு கூட்டு போர் பயிற்சிகள் சீன ஆதிக்கத்திற்கு எதிரானவை ஆகும், இந்த போர் பயிற்சிகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய கடற்படை தளமான சஸிபோவிலும், ஜப்பானிய தரைப்படை தளமான கேம்ப் அய்னோராவிலும் கிரிஷிமாவிலும் இதற்கான நிகழ்வுகள் நடந்தன.

கடல்சார் பயிற்சிகளில் ஜப்பான் கடற்படையின் அஷிஹாரா, அசாகி, காங்கோ, ஒசூமி, ஒடாகா, ஷிரடாகா ஆகிய கப்பல்களும் 1 நீர்மூழ்கியும் பங்கேற்றன, ஆஸ்திரேலியாவின் பரமட்டா எனும் கப்பலும்,

அமெரிக்காவின் நீயு ஆர்லியன்ஸ், 1 பி8ஏ நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் மற்றும் எம்.வி22 ஆஸ்ப்ரே வானூர்திகள் பங்கேற்றன, ஃபிரான்ஸின் டான்னரே மற்றும் சர்காவ்ஃப் கப்பல்கள் பங்கேற்றன.

இது தவிர சிறப்பு படையினர், காலாட்படை வீரர்கள் , பிரங்கி (ஆர்ட்டில்லரி) படையினர், பொறியியல் படையினர் மற்றும் தாக்குதல் மற்றும் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.