12 ரஃபேல் விமானங்களை வாங்கும் குரோஷியா !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று குரோஷிய பிரதமர் ஆன்ட்ரேஜ் ப்ளென்கோவிக் பேசும்போது தனது நாடு ஃபிரான்ஸிடம் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை வாங்க உள்ளதாகவும் இதன் மதிப்பு 1.2 பில்லியன் யூரோக்கள் எனவும் அறிவித்தார்.

இந்த ரஃபேல் போர் விமானங்கள் குரோஷிய விமானப்படையில் உள்ள ரஷ்ய தயாரிப்பு மிக் விமானங்களுக்கு மாற்றாக அமையும் எனவும் யூகோஸ்லாவியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் எனவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல்,ஸ்வீடன், அமெரிக்கா போன்ற நாடுகளும் போட்டியில் இருந்த அதே நேரத்தில் குரோஷியா ஃபிரான்ஸ் நாட்டின் ஆஃபரை தேர்வு செய்ததற்கு காரணம் குறைந்த விலையில் கிடைக்கும் அதிநவீன ரஃபேல் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களது ஜி.டி.பி.யில் இரண்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக பாதுகாப்புக்கு செலவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இந்த ஒப்பந்தம் மூலமாக குரோஷியா முதல்முறையாக நிறைவேற்ற உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி முதல் ஆறு போர் விமானங்கள் வருகிற 2024ஆம் ஆண்டு டெலிவரி செய்யபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விமானத்திற்கான விலை 999 மில்லியன் யூரோக்கள் ஆகும், தற்போதையை நிலையில் இந்த செலவு அவசியமில்லை என விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இது தங்களது பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என கூறியுள்ளார்.