அர்மீனியா அஸர்பெய்ஜான் வீரர்கள் இடையே மோதல் மீண்டும் பதட்டம் அதிகரிப்பு !!

நேற்று அர்மீனியா நாட்டின் சுயுனிக் பிராந்தியத்தில் உள்ள கோஸ்நவார் கிராமத்தில் எல்லையை தாண்டி அஸர்பெய்ஜான் ராணுவ வீரர்கள் உள்நுழைந்தனர்.

சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு உள் புகுந்த அஸர்பெய்ஜான் ராணுவ வீரர்களை விரைந்து வந்த அர்மீனியா ராணுவத்தினர் எதிர்கொண்டு திரும்பி செல்லும்படி எச்சரித்தனர்.

அப்போது அஸர்பெய்ஜான் வீரர்கள் அந்த பகுதி தங்களுக்கு உரியது என கூறி பிரச்சினை செய்யவே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு வீரர்களும் கடுமையாக மோதி கொண்டனர், இதனையடுத்து அஸர்பெய்ஜான் வீரர்கள் பின்வாங்கினர்.

இந்த சண்டையில் 11 அர்மீனிய வீரர்கள் மற்றும் 30க்கும் அதிகமான அஸர்பெய்ஜான் வீரர்கள் காயமடைந்தனர் அதிர்ஷடவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

கடந்த 12 ஆம் தேதியும் இதே போன்று அஸர்பெய்ஜான் வீரர்கள் அர்மீனியாவின் சுயுனிக் மற்றும் கெகார்குனிக் மாகாணங்களில் ஊடுருவி பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.