Breaking News

பூமியில் விழும் சீன ராக்கேட் நியூயார்க் பெய்ஜிங் மாட்ரிட் போன்ற நகரங்களுக்கு ஆபத்து !!

  • Tamil Defense
  • May 5, 2021
  • Comments Off on பூமியில் விழும் சீன ராக்கேட் நியூயார்க் பெய்ஜிங் மாட்ரிட் போன்ற நகரங்களுக்கு ஆபத்து !!

சீனா விண்வெளியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வருகிறது இதற்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல “லாங் மார்ச் 5பி” எனும் ராக்கெட்டை பயன்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் 29ஆம் தேதி சீனாவின் ஹைனான் மாகாணத்தில் இருந்து லாங் மார்ச் ரக ராக்கெட் ஒன்றை சீனா ஏவியது.

இந்த ராக்கெட் டியான்ஹெ விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதியை சுமந்து சென்றது, முதல் பகுதியை டெலிவரி செய்ததும் தற்காலிக சுற்றுவட்ட பாதையில் ராக்கெட் நிலைநிறுத்தபட்டது.

பின்னர் அந்த ராக்கெட் அந்த பாதையில் இருந்து விலகி தற்போது பூமியை 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது, கடந்த வார இறுதியில் மட்டுமே 80கிலோமீட்டர் கீழே இறங்கி உள்ளது.

இந்த ராக்கெட்டின் மையப்பகுதி சுமார் 30 மீட்டர் உயரமும் 21 டன்கள் எடையும் கொண்டதாகும், ஆகவே இது உயிர்சேதம் ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

காரணம் பொதுவாக பூமியை நோக்கி வரும் பொருட்கள் நமது புவிமண்டலத்தில் நுழைந்ததும் எரிந்துவிடும் ஆனால் 10 டன்களுக்கு அதிகமான எதுவும் எரியாது என கூறப்படுகிறது.

இது பூமியில் எங்கு மோதும் என கணிக்க முடியாத சூழல் உள்ளது, ஆனால் நியூயார்க் வெலிங்கடன் பெய்ஜிங் மாட்ரிட் போன்ற நகரங்களில் மோத அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் பூமியில் 70 சதவிகித பகுதி கடலால் ஆனது ஆகவே நிலத்தை விடவும் கடலில் விழுமீ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறை இப்படி லாங் மார்ச் ராக்கெட்டின் பாகங்கள் ஐவரி கோஸ்ட் நாட்டில் கட்டிடங்களில் மோதி சேதம் ஏற்படுத்தியது.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனினும் இது சீனாவின் கவனக்குறைவை காட்டுகிறது இவ்வளவு பெரிய பொருட்களை பொறுப்பாக கையாள வேண்டியது அவசியமாகும்.