
சீனா க்வாட் அமைப்பு தனக்கு எதிராகவே செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளது மேலும் வங்கதேசம் க்வாட் அமைப்பில் சேர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கான சீன தூதர் லீ ஜிமிங் வங்காளதேசம் க்வாட் அமைப்பில் இணைந்தால் இரு நாடுகளிடையேயான உறவில் மிக மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் திரு. அப்துல் மொமேன் இந்த நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டவசமானது எங்கள் வெளியுறவு கொள்கையை நாங்கள் தான் முடிவு செய்வோம் நீண்ட காலமாகவே நாங்கள் யாருடனும் சேராமல் இருக்கிறோம் என கூறினார்.
இது குறித்து பேசிய சீன வெளியுறவு செயலர் லி ஹூவா சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் நல்ல நண்பர்கள் எனவும் அனைத்து நாடுகளையும் சமமாக எண்ணுவதாகவும் கூறினார்.