புதிய தானியங்கி மோர்ட்டார் அமைப்புகளை இந்திய எல்லையோரம் பயன்படுத்த சீனா திட்டமா ??

  • Tamil Defense
  • May 25, 2021
  • Comments Off on புதிய தானியங்கி மோர்ட்டார் அமைப்புகளை இந்திய எல்லையோரம் பயன்படுத்த சீனா திட்டமா ??

சமீபத்தில் சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்தின் ஒர் பிரிவான ஸின்ஜியாங் ராணுவ பிராந்தியத்தில் புதிய தானியங்கி மோர்ட்டார் அமைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன.

மேலும் சீன ராணுவம் இந்த தானியங்கி மோர்ட்டார் அமைப்புகளை கொண்டு ஒரு தாக்குதல் பயிற்சியையும் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வல்லுநர்கள் கூறும்போது இந்த தானியங்கி மோர்ட்டார் அமைப்புகள் சீன படைகளுக்கு பெரும் பலமாக அமையும் காரணம் பெரிய பிரங்கிளை போலில்லாமல் எளிதாக கொண்டு சென்று தாக்க முடியும் எனவும்,

இத்தகைய ஆயுதங்களை கொண்டு மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தி களத்தில் உள்ள படைகளுக்கு உதவியாக இருக்க முடியும் எனவும், தாக்கிவிட்டு எளிதில் நகர்ந்து மற்றொரு இடத்திற்கு சென்று அங்கிருந்தும் தாக்க முடியும் என தெரிவித்தனர்.

இந்த தானியங்கி மோர்ட்டார் அமைப்புகள் 4 சக்கர ஆஃப் ரோடு திறன் கொண்ட தாக்குதல் வாகனங்களில் இணைக்கப்பட்டு பயன்படுத்தி வரப்படுவதாக தெரிகிறது.

இது தானியங்கி பிரங்கிளை போல் அதிக திறன் வாயந்தவையாக இல்லாவிட்டாலும் எதிரி படைகளுக்கு மேற்குறிப்பிட்ட திறன்கள் மூலமாக கடும் சேதத்தை விளைவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.