
இந்திய எல்லைக்கு அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ள சீனப்படைக்களுக்கு truck-mounted rocket அமைப்புகளை சீனா வழங்கியுள்ளது.PHL-03 நெடுந்தூர பலகுழல் ராக்கெட்டின் டிஜிட்டல் ரகம் தற்போது இந்திய எல்லை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.
சீன ஆர்டில்லரி படைப் பிரிவின் பிரதாக ஆயுதமாக இந்த ராக்கெட் அமைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.போர் ஏற்பட்டால் இவற்றை வேகமாக முக்கிய பகுதிகளுக்கு நகர்த்த முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இதன் உதவியுடன் சீனா அனைத்து விதமாக பகுதிகளிலும் போரிட முடியும் என சீனா கூறியுள்ளது.
இந்த ராக்கெட் லாஞ்சரில் 12 ஏவு குழல்கள் இருக்கும்.300மிமீ காலிபர் பேரல்கள் அளவு இந்த குழல்கள் இருக்கும்.இதில் 800கிகி அளவுள்ள ராக்கெட்டுகள் வைத்து ஏவ முடியும்.130கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல்கள் கொண்டவை.
இந்திய இராணுவம் தற்போது கொரானாவுக்கு எதிராக தனது கவனத்தை செலுத்தி அதற்காக தனது உழைப்பை செலுத்தி வரும் நிலையில் சீனா இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வருகிறது.