மெதுவாக பூட்டானை விழுங்க முயற்சிக்கும் சீனா, 8கிமீ உள்ளே புகுந்து கிராமத்தை கட்டி வரும் நிலை !!

  • Tamil Defense
  • May 24, 2021
  • Comments Off on மெதுவாக பூட்டானை விழுங்க முயற்சிக்கும் சீனா, 8கிமீ உள்ளே புகுந்து கிராமத்தை கட்டி வரும் நிலை !!

சீனா பூட்டான் நாட்டிற்கு உள்ளே சுமார் 8 கிலோமீட்டர் புகுந்து மின் உற்பத்தி நிலையம், தகவல் தொடர்பு மையம், ராணுவ தளம், சாலைகள், நிர்வாக கட்டிடங்கள், காவல்நிலையம், கிடங்கு என ஒரு முழு கிராமத்தையே சகல வசதிகளுடன் கட்டி உள்ளது.

இது சீனா நில எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் தனது வரலாற்றிலேயே இதுவரை செய்திராத ஒன்றாகும் மேலும் சீனாவின் விரிவாக்க எண்ணங்களை இதூ தெளிவாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா பூட்டான் நாட்டுடனான 470 கிலோமீட்டர் எல்லையை இதுவரை அங்கீகரிக்கவில்லை மாறாக பூட்டான் நாட்டின் 12 சதவிகித பகுதிகளை தனக்குரியது என சீனா உரிமை கோரி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆக்கிரமிப்பு கிராமத்திற்கு க்யாலபூக் என சீனா பெயர் சூட்டி உள்ளது, நிர்வாக கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமும்சீன அதிபர் பற்றிய வாசகங்களும் காணப்படுகிறது, தற்போதைய நிலையில் இங்கு சில நூறு பேரும் சில கால்நடைகளும் வாழ முடியும் என கருதப்படுகிறது.

ஆனால் தற்போதைய சில தகவல்களின்படி இங்கு வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. கட்டுமான பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.