எல்லையோரம் சீனா மீண்டும் அத்துமீற முயற்சிக்கிறதா

  • Tamil Defense
  • May 17, 2021
  • Comments Off on எல்லையோரம் சீனா மீண்டும் அத்துமீற முயற்சிக்கிறதா

சமீபத்தில் வெளியான சில செயற்கைகோள் புகைப்படங்கள் சீனா லடாக் எல்லையோரம் சில படை மாற்றங்களை செய்துள்ளதை காட்டுகிறது.

இந்த புகைப்படங்களின்படி எல்லை கட்டுபாட்டு கோடு அருகே உள்ள சீன முன்னனி நிலைகளில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பின்னனி நிலைகளில் அதிகளவில் வீரர்கள் உள்ளனர்.

கபெல்லா ஸ்பேஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ள இந்த செயற்கைகோள் புகைப்படங்களில் சீனா தொடர்ந்து பங்கர் வசதி கொண்ட நிலைகளில் வீரர்களை குவித்து வருவது தெரிய வந்துள்ளது.

நீண்ட காலமாக தொடர்ந்து பிரச்சினை நடந்து வரும் நிலையில் பின்வாங்குவதாக ஒப்பு கொண்ட சீனா தற்போது இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பலத்த அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.