
கடந்த 1994ஆம் ஆண்டு திருவனந்தபுரம் நகரத்தில் ரஷிதா ஃபவ்சியா ஆகிய இரு மாலத்தீவு நாட்டவர்களும் நம்பி நாராயணன் மற்றும் சசிகுமாரன் ஆகியோர் இடமிருந்து,
க்ரையோஜெனிக் என்ஜின் தொடர்பான ரகசியங்களை பெற்றதாக கேரள காவல்துறை கைது செய்து வழக்குபதிவு செய்து விஞ்ஞானிகளை துன்புறத்தியது.
பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கில் நம்பி நாராயணன் அவர்களுக்கு தொடர்பில்லை என கடந்த 1996ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
பின்னர் பல வருட சட்ட போராட்டத்தின் பலனாக 2018ஆம் ஆண்டு அவர் நிரபராதி அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
தற்போது கடந்த மாதம் 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் நம்பி நாராயணன் வழக்கில் சிபிஐ வழக்குபதிவு செய்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது.