2024ஆம் ஆண்டு படையில் இணையும் ஏவாக்ஸ், டேங்கர் மற்றும் போக்குவரத்து விமானங்களை அழிக்கும் பிரம்மாஸ் ஏவுகணை !!
ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக்கிடம் பேசிய ரஷ்ய பிரம்மாஸ் திட்ட இயக்குனர் அலெக்சாண்டர் மாக்ஸிசெவ் இந்தியா மற்றும் ரஷ்யா புதிய பிரம்மாஸ் ஏவுஙணையை உருவாக்கி வருவதாகவும்,
இது AWACS (Airborne Early Warning & Control System) அதாவது கண்காணிப்பு ரேடார் விமானங்கள், எரிபொருள் டேங்கர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசும்போது இந்த வகை ஏவுகணையை இலகுரக தேஜாஸ் போர் விமானமே சுமக்கும் அளவுக்கு இலகுவாக இருக்கும் என கூறினார் இதன்மூலம் கனரக சுகோய்30 போர் விமானங்கள் ஒன்றுக்கும் இத்தகைய மேற்பட்ட ஏவுகணைகளை சுமக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த புதிய ஏவுகணையில் புதிய அதிநவீன தேடுதல் கருவி (SEAKER – சீக்கர்) இணைக்கப்படும் எனவும் இதனால் ஏவுகணை இன்னும் திறம்பட செயல்பட முடியும் எனவும் வருகிற 2024ஆம் ஆண்டு இந்த ஏவுகணை படையில் இணையும் எனவும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பிரம்மாஸ் ஏவுகணையின் ஹைப்பர்சானிக் வடிவத்தை இணைந்து தயாரித்து வருவதும் அது மணிக்கு குறைந்தபட்சம் 5 மாக் வேகத்தில் (மணிக்கு 6175கீமீ) செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.