இந்திய தரைப்படைக்கு புதிய கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவி !!

  • Tamil Defense
  • May 21, 2021
  • Comments Off on இந்திய தரைப்படைக்கு புதிய கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவி !!

இந்திய பொதுத்துறை நிறுவனமான BEML சுமார் 55 கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவிகளுக்கான ஒப்பந்தத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவிக்கு BEML நிறுவனம் MFME Mk2 பெயரிட்டுள்ளது, மேலும் இது DRDO விடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவியானது ஒரு மணி நேரத்திற்கு 1.2 கிமீ தொலைவிற்கு இந்த அடையாளப்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளும் எனவும் சுமார் 15கிமீ தொலைவுக்கான பொருட்களை சேமித்து வைத்து இருக்கும் ஈன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கருவி பஞ்சாப் சமவெளிகள் மற்றும் ராஜஸ்தான் தார் பாலைவனம் ஆகிய பகுதிகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.