
ஐஸ்லாந்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கன் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் பற்றி பேசினார்.
அப்போது அவர் காசாவில் உள்ள அல் ஜசீரா ஊடக கட்டிடத்தை இஸ்ரேல் தகர்த்தது பற்றிய தகவல்களை அமெரிக்காவிடம் பகிரந்து உள்ளதாக தெரிவித்தார்.
அநேகமாக இந்த தகவல்கள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அந்த கட்டிடத்தை பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுவும் இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது குறிப்பிடத்தக்கது ஆகும்.