
இந்திய தரைப்படை தனது அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்தும் நேரடி சந்திப்புகளை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தரைப்பை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தரைப்படையின் சுற்றிக்கையில் இந்த உத்தரவு மே மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் வழக்கம் போலவே தரைப்படையின் எல்லையோர பணிகள், படை நகர்வுகள், கொரோனா பேரிடர் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் நடக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.