Breaking News

வாரணாசியில் கோரானா மருத்துவமனை அமைத்த இராணுவம்

  • Tamil Defense
  • May 11, 2021
  • Comments Off on வாரணாசியில் கோரானா மருத்துவமனை அமைத்த இராணுவம்

வரணாசியில் இராணுவம் கொரானா சிகிச்சை மையத்தை திறந்துள்ளது.வரணாசியில் பண்டிட் ராஜன் மிஸ்ரா என்ற மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

டெல்லி,அகமதாபாத் மற்றும் லக்னோவை தொடர்ந்து தற்போது வாரணசியிலும் இராணுவம் கொரானா சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

250 படுக்கை வசதி கொண்ட ஐசியு- உடன் முழுதும் ஆக்சிஜன் வசதி கொண்ட 750 படுக்கைகள் கொண்ட மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வரனாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டியுடன் இணைந்து இந்த கோவிட் மருத்துவமை இயங்கும்.இராணுவத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மருத்துவர்கள்,நர்சிங் மற்றும் மெடிக்கல் உதவியாளர்களுடன் இந்த மருத்துவமனை இயங்கும்.

இதே போல தனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை நாடு முழுதும் இந்திய இராணுவம் அனுப்பி வருகிறது.

எனது இராணுவத்தால் பெருமை கொள்கிறேன்.