சவுதிக்கு போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா காரணம் என்ன !!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மிக தீவிரமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க தனது போர் விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

சவுதியில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் அமெரிக்க மரைன் கோரின் 224 போர் விமான படையணிக்கு சொந்தமான எஃப்.ஏ-18டி ஹார்னெட் ரக போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போர் விமானங்களுடன் ஒட்டுமொத்த படையணியும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் பியூஃபோர்ட்டில் இருந்து சவுதி சென்று அமெரிக்க மத்திய விமானப்படை கட்டளையகத்தில் இணைய உள்ளது.

இந்த நடவடிக்கை வழக்கமானது தான் அமெரிக்க கடற்படை மரைன் கோர் மற்றும் விமானப்படை போர் விமானங்கள் இப்படி உலகம் முழுக்க அனுப்பி வைக்கப்படுவது நீண்ட கால வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.