இஸ்ரேலுக்கு சுமார் 75மில்லியன் டாலர் அளவிலான ஆயுத விற்பனைக்கு அதிபர் பைடன் ஒப்புதல் !!

  • Tamil Defense
  • May 17, 2021
  • Comments Off on இஸ்ரேலுக்கு சுமார் 75மில்லியன் டாலர் அளவிலான ஆயுத விற்பனைக்கு அதிபர் பைடன் ஒப்புதல் !!

இஸ்ரேலுக்கு சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஆயுதங்கள் அனைத்துமே அதிநவீன துல்லிய தாக்குதல் குண்டுகள் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக மற்றும் பெண்டகன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க காங்கிரஸில் முறையான முன்னறிவிப்பு இன்றி ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், வெளிப்படை தன்மை இல்லை எனவும் அதிபர் பைடனின் கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில் சமீபத்தில் இஸ்ரேலகய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுவுடன் பேசிய அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்து கொள்ள சகலவித உரிமைகளும் இருப்பதாக கூறியதும்,

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜே ஆஸ்டின் அவர்களும் இதே கருத்தை வழிமொழிந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.