சீன கடற்படைக்கு இந்திய பெருங்கடலில் ஆப்பு !!

  • Tamil Defense
  • May 3, 2021
  • Comments Off on சீன கடற்படைக்கு இந்திய பெருங்கடலில் ஆப்பு !!

இந்தியாவுக்கு சுமார் 6 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை விமானங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் இயங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க காங்கிரஸுக்கு தகவல் அளித்துள்ளது.

இந்த 6 புதிய மேலதிக பொசைடான் விமானங்கள் சுமார் 2.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியா 8 பொசைடான் விமானங்களை சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2016ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட 4 பொசைடான் விமானங்களை இந்திய கடற்படை படையில் இணைத்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா சுமார் 10 மேலதிக பொசைடான் விமானங்களை வாங்க இருந்த நிலையில் பட்ஜெட் காரணமாக 6 ஆக எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இவை அனைத்தும் படையில் இணையும் பட்சத்தில் இந்தியா சுமார் 18 பொசைடான் விமானங்களுடன் உலகிலேயே அதிகமாக பொசைடான் விமானங்களை வைத்திருக்கும் இரண்டாவது நாடாக திகழும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த விற்பனை நடவடிக்கையானது, வெளிநாட்டு ராணுவ வர்த்தக திட்டத்தின் கீழ் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.