ரஷ்யாவில் 100 விமானப்படை வீரர்கள் S-400 பயிற்சி !!

  • Tamil Defense
  • May 18, 2021
  • Comments Off on ரஷ்யாவில் 100 விமானப்படை வீரர்கள் S-400 பயிற்சி !!

கொரோனா பெருந்தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் ரஷ்யாவில் 100 இந்திய விமானப்படை வீரர்கள் எஸ்400 அமைப்பை இயக்க பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த வருட இறுதியில் எஸ்400 அமைப்பின் டெலிவரியை ரஷ்யா ஆரம்பிக்க உள்ள நிலையில் தற்போது பல்வேறு இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் குளிர், கடும் வெப்பம், தூசு, பாலைவனம், சமவெளிகள், மலைகள் என.அனைத்து சூழ்நிலைகளிலும் இந்த அமைப்பு இயங்குவதை இந்த சோதனைகள் மூலமாக உறுதிப்படுத்த உள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்திலேயே 100 விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட படையணி ரஷ்யாவுக்கு பயிற்சி பெற சென்ற நிலையில் ரஷ்ய ராணுவம் மற்றும் அல்மாவ் ஆன்டே நிறுவனத்தினர் இணைந்து பயிற்சி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.